பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்-அபராதம்
பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது;
தச்சநல்லூர்:
நெல்லை மாநகராட்சி தச்சநல்லூர் மண்டலத்திற்குட்பட்ட மீனாட்சிபுரம் பகுதி, நெல்லை சந்திப்பு ரெயில் நிலைய பகுதி, பூ மார்க்கெட் பகுதி உள்ளிட்ட இடங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், பயன்படுத்துவதாகவும் மாநகராட்சிக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து நெல்லை மாநகராட்சி தச்சநல்லூர் மண்டல சுகாதார ஆய்வாளர் முருகன் தலைமையில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் சசிரேகா, ஜெபா மற்றும் ஊழியர்கள் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் டம்ளர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதை பயன்படுத்திய மற்றும் விற்பனைக்கு வைத்திருந்த கடைகளுக்கு ரூ.12 ஆயிரத்து 700 அபராதம் விதிக்கப்பட்டது.