போதை மாத்திரைகள் பறிமுதல்; ஒருவர் கைது

போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-09-24 21:19 GMT


விருதுநகர் சிவகாசி ரோட்டில் ஆமத்தூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் அழகாபுரி விலக்கில் உள்ள தனியார் கல்லூரி அருகே சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டு இருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் அருப்புக்கோட்டை சொக்கலிங்காபுரத்தை சேர்ந்த யோகராஜ் (வயது 43) என்பது தெரியவந்தது. அவர் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பேசியதை தொடர்ந்து அவரை போலீசார் சோதனை செய்தனர். பின்னர் அவரிடம் இருந்த 100 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்ததுடன் அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்