லாட்டரி சீட்டுகள் பறிமுதல்; 2 பேர் கைது

செங்கோட்டை அருகே லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-12-28 18:45 GMT

செங்கோட்டை:

செங்கோட்டை அருகே உள்ள புளியரை சோதனை சாவடியில் சப்-இன்ஸ்பெக்டர் சஞ்சய் காந்தி வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது சட்ட விரோதமாக கேரளாவில் இருந்து தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனைக்காக கொண்டு வந்த சிவகிரியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (வயது 44), ராமராஜ் (33) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.8,200 மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் மற்றும் மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.


Tags:    

மேலும் செய்திகள்