ஆட்டோவில் மதுபாட்டில்கள் பறிமுதல்; டிரைவர் கைது
மார்த்தாண்டத்தில் ஆட்டோவில் மதுபாட்டில்கள் பறிமுதல்; டிரைவர் கைது
குழித்துறை,
மார்த்தாண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் மார்த்தாண்டம் மார்க்கெட் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர்.
அந்த ஆட்டோவிற்குள் 25 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் மதுபாட்டில் கடத்தியதாக மார்த்தாண்டம் வடக்கு தெரு பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (வயது 47) என்பது தெரியவந்தது. தொடர்ந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.