பேரையூர்
மதுரை மாவட்டம் வில்லூர் போலீசார் மதுவிலக்கு சம்பந்தமாக ரோந்து சென்றனர். அப்போது வில்லூர் ஒத்தப்பட்டியை சேர்ந்த மாரியப்பன் (வயது 50) என்பவர் விற்பனை செய்வதற்காக 16 மதுபாட்டில்கள் வைத்திருந்த போது ரோந்து சென்ற போலீசார் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
இதேபோல் சிலைமலைபட்டியை சேர்ந்த ராஜா (37) வைத்திருந்த 9 மதுபாட்டில்களை பேரையூர் போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். அல்லிகுண்டத்தை சேர்ந்த ராஜா (52) என்பவரிடமிருந்து 7 மதுபாட்டில்களை டி.கல்லுப்பட்டி போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.