சேலம் வழியாக சென்றரெயிலில் 6½ கிலோ கஞ்சா பறிமுதல்

Update: 2023-08-05 19:38 GMT

சூரமங்கலம்

ரெயில்களில் கஞ்சா மற்றும் போதைப்பொருட்களை தடுக்கும் வகையில் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். இதையொட்டி நேற்று பாட்னா-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரெயில்வே போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது ரெயிலில் பின்புறம் உள்ள முன்பதிவில்லா பெட்டியில் கேட்பாரற்று கிடந்த கைப்பையை எடுத்து போலீசார் சோதனை நடத்தினர். அதில் 6½ கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த பையை கொண்டு வந்தது யார்? என்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பையை யார் கொண்டு வந்தது என தெரியவில்லை. இதையடுத்து ரெயில்வே போலீசார் 6½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து சேலம் ரெயில்வே போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்