கடலூரில்மணல் கடத்திய 5 பேர் மீது வழக்குமாட்டு வண்டிகள் பறிமுதல்

கடலூரில் மணல் கடத்திய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-04-02 18:45 GMT


கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் நேற்று திருமாணிக்குழி பாலம் அருகில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்த திருமாணிக்குழி ஆறுமுகம் மகன் திருமேனி (வயது 45), ராஜாங்கம் (60), வெள்ளக்கண்ணு (70), செல்வம் (45), காத்தமுத்து (31) ஆகிய 5 பேரும் போலீசாரை பார்த்ததும் வண்டிகளை விட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர். இதையடுத்து 5 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்த போலீசார், அவர்கள் 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்