கன்டெய்னர் லாரியில் கடத்திய 450 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

பெங்களூருவில் இருந்து கன்டெய்னர் லாரியில் கடத்திவந்த 450 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-06-29 18:41 GMT

சிவகங்கை

பெங்களூருவில் இருந்து கன்டெய்னர் லாரியில் கடத்திவந்த 450 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

புகையிலை பொருட்கள்

பெங்களூருவில் இருந்து ஒரு கன்டெய்னர் லாரியில் புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஐ.ஜி. அலுவலக தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ்பாபு, சிவகங்கை நகர் போலீஸ் இன்ஸபெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் சிவகங்கையை அடுத்துள்ள ஒக்கூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பெங்களூருவில் இருந்து வந்த கன்டெய்னர் லாரி ஒன்றில் வீட்டு உபயோக பொருட்களுக்கு மத்தியில் மறைத்து வைத்து ரூ.2½ லட்சம் மதிப்பிலான 450 கிலோ புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரிந்தது.

3 பேர் கைது

இதை தொடர்ந்து போலீசார் அவற்றை லாரியுடன் பறிமுதல் செய்தனர். மேலும் லாரியை ஓட்டிவந்த பெங்களூரு ஹெரட்டிகேரே பகுதியை சேர்ந்த அழகேசன் (வயது 26) மற்றும் ஒக்கூரை சேர்ந்த ராமநாதன்(25), ஓ.புதூரை சேர்ந்த தேவபுரட்சிதாசன் (35) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்