மாரண்டஅள்ளி:
மாரண்டஅள்ளி அருகே திருமல்வாடி கிராமத்தில் சின்னசாமி என்பவரது நிலத்தில் இருந்து அனுமதி இல்லாமல் செம்மண் கடத்துவதாக மாரண்டஅள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு டிராக்டரிலல் செம்மண் அள்ளிய டிராக்டரை போலீசார் பறிமுதல் சய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேசை கைது செய்தனர்.