ஓசூர்:
ஓசூர் சிப்காட் போலீசார் பேகேப்பள்ளி சர்க்கிள் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த கார் மற்றும் மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 45 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் அவை கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியில் இருந்து விற்பனைக்காக கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து குட்கா கடத்தியதாக பேகேப்பள்ளி ராஜேஷ் (23), சங்கர் (27) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.18 ஆயிரம் மதிப்புள்ள குட்கா, மோட்டார் சைக்கிள், கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.