ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் கண்டக்டர் மயங்கி விழுந்து சாவு

ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் கண்டக்டர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

Update: 2023-08-11 20:23 GMT


ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் திருநகர் காலனியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 58), அரசு பஸ் கண்டக்டராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று இவர் ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் பணியில் இருந்த போது திடீரென்று மயங்கி விழுந்தார். உடனே அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல 108 ஆம்புலன்சு வந்தது. அதில் இருந்த மருத்துவ பணியாளர்கள் அவரை பரிசோதித்த போது அவர் இறந்துவிட்டது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்