கண்டக்டர் தூக்குப்போட்டு தற்கொலை

கண்டக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-04-12 19:59 GMT

தொட்டியம் அருகே உள்ள கீழ கார்த்திகைபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரப்பன். இவரது மகன் பால்ராஜ் (வயது 26) தனியார் பஸ் கண்டக்டரான இவருக்கு குடல் சம்பந்தமான அறுவை சிகிச்சை மேற்கொண்டதால் கடந்த சில மாதங்களாகவே தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனம் உடைந்த பால்ராஜ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது தாயின் சேலையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் தொட்டியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்