மின் கட்டண உயர்வை கண்டித்து சிட்கோ தொழிற்சாலைகள் அடைப்பு

பரமக்குடியில் மின் கட்டண உயர்வை கண்டித்து சிட்கோ தொழிற்சாலைகள் அடைக்கப்பட்டன

Update: 2023-09-25 18:45 GMT

பரமக்குடி

பரமக்குடியில் மின் கட்டண உயர்வை கண்டித்து சிட்கோ தொழிற்சாலைகள் அடைக்கப்பட்டன.

மின் கட்டண உயர்வு

பரமக்குடி அருகே தெளிச்சாத்தநல்லூர் மற்றும் நென்மேனி பகுதிகளில் சிட்கோ தொழில் பேட்டைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு இருந்து தான் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு தேவையான உபகரணங்கள் தயார் செய்து வழங்கப்பட்டு வருகிறது. இங்கு மட்டும் 800 தொழில் பேட்டைகள் இயங்கி வருகின்றன. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். தற்போது தொழில் பேட்டைகளுக்கான மின் கட்டண உயர்வு 3 மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளது.

அதை கண்டித்து சிறு,குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் நேற்று ஒரு நாள் தொழிற்சாலைகளை அடைத்து வேலைநிறுத்தம் செய்தனர். அதைத் தொடர்ந்து பரமக்குடியில் உள்ள தொழில்பேட்டைகளில் நேற்று தொழிற்சாலைகளை அடைத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் 2000 பேருக்கு வேலை இழப்பு ஏற்பட்டது.

உண்ணாவிரதம்

மேலும் ரூ.50 லட்சம் மதிப்பிலான பணிகள் முடங்கின. பரமக்குடி மின் உபகரண உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சேகர் தலைமையில் ஏராளமானவர்கள் மதுரையில் நடந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர். இதில் பரமக்குடிசெயலாளர் ராமதாஸ், துணைத்தலைவர் குணசேகரன், உதவிச் செயலாளர் பிரகாசம், பொருளாளர் கார்த்திக் மற்றும் நிர்வாகி இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனால் சிட்கோ தொழிற்பேட்டை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்