மத்திய அரசை கண்டித்து இளைஞர் காங்கிரசார் தெருமுனை பிரசாரம்

தெருமுனை பிரசாரம்

Update: 2022-07-25 16:04 GMT

மத்தியில் ஆளும் மக்கள் விரோத பா.ஜ.க. அரசு கண்டித்து சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை வாரச்சந்தை அருகில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் தெருமுனை பிரசாரம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞர்கள் காங்கிரஸ் தலைவர் எஸ்.குணசேகரன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் எல்.அருண் பாஸ்கர், பவானிசாகர் சட்டமன்ற தொகுதி தலைவர் என்.கார்த்தி, வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜி.தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிரசாரத்தில் சமையல் எரிவாயு விலை ஏற்றம், பெட்ரோல், டீசல் விலை ஏற்றம், அரிசி, கோதுமை, தயிர் உட்பட பல்வேறு உணவு பொருள்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. விதிப்பு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் எஸ்.முத்துக்குமார், மாவட்ட முன்னாள் தலைவர் என்.வினோத், ஸ்ரீ ராம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொதுச்செயலாளர் சிரஞ்சீவி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்