மல்யுத்த வீராங்கனைகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கோத்தகிரியில் மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மல்யுத்த வீராங்கனைகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கோத்தகிரியில் மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கோத்தகிரி
கோத்தகிரி மார்க்கெட் திடலில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கங்களின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தாலுக்கா செயலாளர் மணிகண்டன் தலைமை வகித்தார். ஆர்பாட்டத்தில் பதக்கங்களை பெற்றுத் தந்து இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீராங் கனைகளை மோசமாக கைது செய்த காவல்துறையை கண்டித்தும், பாலியல் குற்றம் சாட்டப்பட்ட பா.ஜ.க, எம்.பியை கைது செய்ய வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர் சங்கத்தினர் மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பலர் கலந்துகொண்டனர்.