மக்கள் நீதிமன்றத்தில் 1,084 வழக்குகளுக்கு சமரச தீர்வு

மக்கள் நீதிமன்றத்தில் 1,084 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.

Update: 2022-08-13 18:53 GMT

புதுக்கோட்டையில் மக்கள் நீதிமன்றம் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட முதன்மை நீதிபதி அப்துல் காதர் தலைமை தாங்கினார். விபத்தில் காலை இழந்த ரவி என்பவருக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.16 லட்சத்து 96 ஆயிரத்து 571 வழங்கப்பட்டது.

அத்தியாவசிய பண்டங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு கூடுதல் மாவட்ட நீதிபதி பாபுலால், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சசிக்குமார் உள்ளிட்ட நீதிபதிகள் கொண்ட அமர்வு மற்றும் தாலுகா நீதிமன்றங்களில் அமர்வு என 6 அமர்வுகள் நடைபெற்றது.

இதில் 1,084 வழக்குகள் சமரச தீர்வு காணப்பட்டு ரூ.13 கோடியே 82 லட்சத்து 26 ஆயிரத்து 921 உரியவர்களுக்கு வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்