வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நிறைவு

வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நிறைவு

Update: 2023-05-29 19:30 GMT

வால்பாறை

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை, மானாம்பள்ளி, பொள்ளாச்சி, உலாந்தி ஆகிய 4 வனச்சரக பகுதியில் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் அடிப்படையில் தென்மேற்கு பருவமழைக்கு முந்தைய வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி கடந்த 26-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை நடந்தது.

வால்பாறை வனச்சரக பகுதியில் வனச்சரகர் வெங்கடேஷ், மானாம்பள்ளி வனச்சரக பகுதியில் வனச்சரகர் மணிகண்டன் ஆகியோர் தலைமையில் கணக்கெடுப்பு பணி வனக்காவல் பகுதியில் 20 கிலோமீட்டர் தூரத்திற்கும், நேர் கோட்டு பாதையில் நடந்து சென்றும் கணக்கெடும் பணி நடைபெற்றது.

இதில் நேரடியாக பார்க்கப்பட்டும், எச்சங்கள் மூலமும் கணக்கெடுப்பு நடந்தது.

இந்த கணக்கெடுப்பில் வனப்பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது தெரியவந்தது. இதன் விவரங்கள் நேற்று பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்