பொள்ளாச்சி
பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் உள்நோயாளிகள், அவரச சிகிச்சை பிரிவு, வெளிநோயாளிகள், குழந்தைகள், பச்சிளம் குழந்தைகள் உள்பட 19 மருத்துவ பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை அரசு ஆஸ்பத்திரிகளில் தேசிய தரச்சான்று குழு ஆய்வு செய்து சிறப்பான ஆஸ்பத்திரிகளை தேர்வு செய்து நிதியுதவி அளித்து வருகிறது.
அதன்படி பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 7-ந் தேதி தொடங்கிய ஆய்வு நேற்று நிறைவு பெற்றது. இதில் தேசிய தரச்சான்று குழுவை சேர்ந்த டாக்டர்கள் ரேஷ்மி (கேரளா), விசாலானி (தெலுங்கானா), சந்தியா (அரியானா), சவுத்திரி (மேற்கு வங்காளம்) ஆகியோர் கலந்துகொண்டனர். ஆய்வு முடிந்ததை தொடர்ந்து அறிக்கை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டனர். முன்னதாக அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் மரக்கன்று நட்டு வைத்தனர். அப்போது ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் ராஜா, நோயாளிகள் நலச்சங்க உறுப்பினர் வெள்ளை நடராஜ் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் உடன் இருந்தனர்.