குடகனாற்றில் ரசாயன கழிவுநீர் கலப்பதாக புகார்; அதிகாரிகள் ஆய்வு

வேடசந்தூரில் குடகனாற்றில் ரசாயன கழிவுநீர் கலப்பதாக புகார் எழுந்ததை தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Update: 2023-07-04 21:00 GMT

வேடசந்தூரில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவுநீர் குடகனாற்றில் கலப்பதாக திண்டுக்கல் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு துறை செயற்பொறியாளர் மணிமாறனுக்கு புகார் வந்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் உதவி பொறியாளர்கள் திவ்யா, தங்கராஜ் ஆகியோர் தலைமையிலான குழுவினர் நேற்று குடகனாற்றில் ஆய்வு செய்தனர்.

வேடசந்தூர், நாகம்பள்ளி, திருக்கூர்ணம், நெல்லிகோம்பை, கூம்பூர், அழகாபுரி அணை, லட்சுமணன்பட்டி அணைக்கட்டு, அய்யம்பாளையம் அணைக்கட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குடகனாற்று தண்ணீரை ஆய்வு செய்தனர். அப்போது ஆற்றில் இருந்து ஆய்வுக்காக தண்ணீரை பாட்டிலில் எடுத்து சென்றனர். இந்த ஆய்வின்போது, குடகனாறு பாதுகாப்பு சங்க தலைவர் ராமசாமி மற்றும் விவசாய சங்கத்தினர் உடனிருந்தனர்.  

Tags:    

மேலும் செய்திகள்