நகைக்கடை உரிமையாளரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி போலீசில் புகார்

பனப்பாக்கத்தில் நகைக்கடை உரிமையாளரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி போலீசில் புகார் செய்யப்பட்டது.

Update: 2023-06-03 17:39 GMT

நெமிலி

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் ரத்தினன் லால் (வயது 45) என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார்.

இன்று வழக்கம்போல் கடையை திறந்து வியாபாரம் செய்து வந்துள்ளார்.

மதியம் 2 மணியளவில் அடையாளம் தெரியாத 7 நபர்கள் கடைக்கு வந்து நன்கொடை கேட்டுள்ளனர். கடையின் உரிமையாளரோ அண்ணன் வந்ததும் தருகிறேன் என்று கூறியுள்ளார்.

உடனே நன்கொடை வழங்காததால் அந்த நபர்கள் உரிமையாளரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

இந்த நிலையில் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு அடகு மற்றும் நகைக்கடை சங்க மாநில தலைவர் சுவாமி டெஜானந்த் தலைமையில் நெமிலி போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்