ஓட்டலில் வாங்கிய பார்சல் உணவில் பிளேடு கிடந்ததாக புகார் -உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை

ஓட்டலில் வாங்கிய பார்சல் உணவில் பிளேடு கிடந்ததாக புகார் குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-06-19 00:18 GMT


ஓட்டலில் வாங்கிய பார்சல் உணவில் பிளேடு கிடந்ததாக புகார் குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உணவில் பிளேடு

மதுரை சோலையழகுபுரம் பகுதியை சேர்ந்த ஒருவர், மதிய உணவு சாப்பிடுவதற்காக ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் பார்சல் சாப்பாடு ஒன்றை வாங்கி உள்ளார். இந்தநிலையில் வீட்டில் சாப்பாடு பார்சலை பிரித்து பார்த்தபோது, வெள்ளை சாதத்தில் பாதி உடைந்த பிளேடு துண்டு ஒன்று கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனை தொடர்ந்து அவர் சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு நேரில் சென்று அங்குள்ள ஊழியர்களிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். அப்போது ஊழியர்களுக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து, அந்த நபர் இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறைக்கு புகார் அளித்தார். அதன்பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அங்கு சென்று பார்சலில் வந்த உணவை சோதனை செய்ததோடு, உணவகத்தில் சோதனை மேற்கொண்டனர். மேலும் இதுபற்றி உணவகத்திற்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு விளக்கம் கேட்கப்பட்டதாக தெரிகிறது.

நோட்டீஸ்

இதுகுறித்து மதுரை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், சாப்பாட்டில் பிளேடு கிடந்தது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு நடத்தினோம். ஆய்வின்போது சாதத்தில் பிளேடு கிடந்தது குறித்து விளக்கம் கேட்கப்பட்டது. மேலும் உணவகத்தை ஆய்வு மேற்கொண்டு அங்குள்ள ஊழியர்கள் உரிய பராமரிப்பு இன்றி இருப்பது தெரியவந்தது.

இதனால், உணவகத்திற்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. தொடர்ந்து 14 நாட்களுக்கு உணவகத்தில் உள்ள குறைகளை சரிசெய்யுமாறு அறிவுறுத்தியுள்ளோம் என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்