நரிக்குறவர் இன மக்களை வனத்துறையினர் தாக்கியதாக புகார்.. ஊட்டியில் பரபரப்பு
வனத்துறையினருக்கும் நரிக்குறவர் இன மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் சீகூர் வனத்துறையினர் தாக்கியதாக கூறப்படுகிறது.
ஊட்டி,
சிறியூர் மாரியம்மன் கோவில் கோவில் நடை சாத்தப்பட்டு திருவிழா முடிந்ததையடுத்து கடை வைத்திருந்த அனைவரையும் வெளியேறுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தினர்.
இது குறித்து வனத்துறையினருக்கும் நரிக்குறவர் இன மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் சீகூர் வனத்துறையினர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த நரிக்குறவர் இன மக்கள் வாழைத்தோட்டம் சோதனை சாவடி பகுதியில் வனத்துறையினரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து அங்கு வந்த மசினகுடி காவல்துறையினர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தி உதகை கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர்.