தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-06-28 18:45 GMT

தொல்லை தரும் நாய்கள்

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் பகுதியில் சமீப காலமாக நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. சாலையில் செல்பவர்களை நாய்கள் துரத்துவதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் வாகனஓட்டிகளை நாய்கள் துரத்தும் நிலையும் அவ்வப்போது ஏற்படுகிறது. எனவே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புகழ், திருக்கோஷ்டியூர்.

மடை சரி செய்யப்படுமா?

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிம் வாணியங்காடு பஞ்சாயத்தை சேர்ந்த பில்லத்தியேந்தல் கிராமத்தில் விவசாயத்திற்கு உள்ள மடை நீண்ட காலமாக சேதமடைந்து உள்ளது. இதனால் இந்த பகுதியில் விவசாயம் செய்வதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த பகுதியில் உள்ள மயானக்கரைக்கு சாலை வசதி இல்லை. எனவே இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், வாணியங்காடு.

சேதமடைந்த சாலை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதிக்குட்பட்ட ஒரு சில பகுதிகளில் சாலைகள் ஆங்காங்கே சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே சேதமடைந்த சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், திருப்பத்தூர்.

நடவடிக்கை தேவை

சிவகங்கை நகர் பகுதியில் உள்ள ஒரு சில இடங்களில் சாலையில் குப்பைகள் ஆங்காங்கே குவிந்து கிடக்கின்றன. தேங்கி கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே குப்பைகள் தேங்காமல் அவ்வப்போது அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், சிவகங்கை.

தீர்வு காணப்படுமா?

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலிருந்து சுற்றுவட்டார பகுதி கிராமங்களுக்கு செல்ல போதிய அளவு பஸ்கள் இல்லை. இதனால் பெண்கள் மற்றும் முதியோர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே கூடுதல் நகர் பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், காரைக்குடி.  

Tags:    

மேலும் செய்திகள்