புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
நூலகம் பயன்பாட்டிற்கு வருமா?
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் மேலபுதுக்குடி பகுதியில் உள்ள நூலகம் பல மாதங்களாக திறக்கப்படாமல் உள்ளது. இதனால் ,இப்பகுதி மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படுகிறது. எனவே அதிகாரிகள் நூலகத்தை பொதுபயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், மேலபுதுக்குடி.
சாலை சீரமைக்கப்படுமா?
ராமநாதபுரம் மாவட்டம் செல்லூர் ஊராட்சி முத்துராமலிங்கபுரம் பகுதியில் உள்ள சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் மழைக்காலங்களில் மழைநீரானது குளம்போல் தேங்கி நிற்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும்.
பொதுமக்கள், முத்துராமலிங்கபுரம்.
நோய் பரவும் அபாயம்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் சம்மாட்டி அப்பா தெருவில் கழிவுநீர் சாலையில் செல்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், மண்டபம்.
எரியாத தெருவிளக்கு
ராமநாதபுரம் குழந்தைசாமி ஐயர்தெரு, பானுமதி நாச்சியார் தெரு பகுதியில் உள்ள தெருவிளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் போதிய வெளிச்சமின்றி சிரமப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் தெருவிளக்குகள் அமைத்துதர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மனோகரன், ராமநாதபுரம்.
பொதுமக்கள் அவதி
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பேரூராட்சிக்குட்பட்ட 14-வது வார்டு பகுதியில் தெருவிளக்குகள் எரிவதில்லை. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருநாவுக்கரசு, தொண்டி.