புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-01-01 18:45 GMT

நோய் பரவும் அபாயம்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் கொசுக்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் இரவு நேரங்களில் மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் கொசுக்களின் மூலம் டெங்கு போன்ற நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. எனவே கொசுக்களை ஒழிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேல்ராஜ், பரமக்குடி.

நாய்கள் தொல்லை

ராமநாதபுரம் நகர் மற்றும் அதன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், ராமநாதபுரம்.

சேதமடைந்த சாலை

ராமநாதபுரம் மாவட்டம் ராஜசிங்கமங்கலம் தாலுகா கவனக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பூவாணி கிராமத்திற்கு செல்லும் சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முத்துசலெ்வம், ராஜசிங்கமங்கலம்.

விபத்து அபாயம்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் நகர் பகுதி சாலை சில இடங்களில் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். மேலும் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முத்துசாமி, முதுகுளத்தூர்.

மின்விளக்குகள் தேவைபுகார் பெட்டி

ராமநாதபுரம் மாவட்டம் மேலச்செல்வனூர் ஊராட்சி எம்.எஸ்.புதுகுடியிருப்பு கிராமத்தில் தொடக்கப்பள்ளி அருகில் மின்விளக்குகள் இல்லை. மேலும் இதன் அருகில் குடிதண்ணீர் கிணறு, கோவில் அமைந்துள்ளதால் இங்கு வரும் பொதுமக்கள் பொதிய வெளிச்சமின்றி சிரமப்படுகின்றனர். மேலும் இருட்டை பயன்படுத்தி வழிப்பறி போன்ற சம்பவங்களும் நிகழ வாய்ப்பு உள்ளது. எனவே இப்பகுதியில் மின்விளக்குகள் அமைத்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், ராமநாபுரம். 

Tags:    

மேலும் செய்திகள்