நாய்கள் தொல்லை
மதுரை யா.ஒத்தக்கடை அய்யப்பன் நகர் 1-வது தெரு முதல் 4-வது தெரு வரை நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகிறது. இந்த நாய்கள் அப்பகுதியில் செல்லும் பொதுமக்களையும் குழந்தைகளையும் அச்சுறுத்தி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொல்லை தரும் நாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், மதுரை.
பயணிகள் நிழற்குடை தேவை
மதுரை வடக்கு தொகுதி செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோடு எல்.ஐ.சி. பஸ் நிறுத்தம் அருகில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் இங்கே வரும் முதியோர், கர்ப்பிணிகள் நீண்ட நேரம் வெயிலில் நிற்க வேண்டி உள்ளது. ஆகவே இங்கே பயணிகள் நிழற்குடை கட்டி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சந்தனகுமார், மதுரை.
சிமெண்டு சாலை வேண்டும்
மதுரை மாநகராட்சி 30- வது வார்டு மதிச்சியம் முத்து தெரு பகுதி சாலை சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. சாலையில் இருந்த கற்கள் பெயர்ந்து மேடு, பள்ளங்களாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்கமுடியாமல் வாகனஓட்டிகள், பாதசாரிகள் சிரமப்படுகிறார்கள். அவ்வப்போது வாகனங்களும் பழுதாவதால் முத்துதெரு சாலையை சிமெண்டு ரோடாக மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அன்புமணி, மதிச்சியம்.
சேறும் சகதியுமான சாலை
மதுரை கரும்பாலை பள்ளிவாசல் கிழக்கு தெரு, சத்தியவாணி, முத்துநகர் சந்து சாலை மண்ரோடாக காட்சியளிக்கிறது. இந்த நிலையில் கடந்த சிலநாட்களாக இந்த சந்தில் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயானது சேதமடைந்து நீரானது வெளியேறி வருகிறது. இதனால் இந்த சாலை சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கருப்பாலை.
தெருவிளக்கு அமைக்கப்படுமா?
மதுரை மாநகர் 12-வது வார்டு ராமலட்சுமி நகர் பகுதியில் போதிய அளவு தெருவிளக்கு இல்லை. இதனால் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக அடிக்கடி விபத்துக்களும், வழிப்பறி சம்பவங்களும் நடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் தெருவிளக்கு அமைத்து தருவார்களா?
பார்த்திபன், மதுரை.
பாதாள சாக்கடை சரிசெய்யப்படுமா?
மதுரை மாநகர் 24-வது வார்டு லெனின் தெருவில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் செல்கிறது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சங்கரபாண்டியன், மதுரை.
புதா்மண்டி கிடக்கும் குடிநீா் குழாய்கள்
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ஒன்றியம் வீரப்பெருமாள் புரம் ஊராட்சியில் உள்ள தண்ணீர் குழாய்கள் சேதமடைந்தும் புதர் மண்டியும் கிடக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் தண்ணீா் பிடிக்க முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனா். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
க.நாராயணன், கள்ளிக்குடி,
பெயர்பலகை வேண்டும்
மதுரை கோச்சடையில் உள்ள காளை அம்பலக்கார தெரு தபால்நிலையத்திற்கு பெயர் பலகை இல்லை. இதனால் இந்த தபால்நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் திசைமாறி செல்லும் நிலை நீடிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெயர் பலகை மற்றும் கோச்சடை பஸ் நிலையத்தில் இருந்து தபால் நிலையத்திற்கு திசைப்பலகையும் வைக்க வேண்டும்.
ராஜன், கோச்சடை
செய்தி எதிரொலி
மதுரை அனுப்பானடி 89-வது வார்டு அம்பேத்கர் தெருவில் உள்ள தெருவிளக்குகள் எரியவில்லை. இதுகுறித்த செய்தியானது தினத்தந்தி நாளிதழில் புகார் பெட்டியில் வெளியிடப்பட்டது. தற்போது செய்தி எதிரொலியாக எரியாத தெருவிளக்குகள் அப்புறப்படுத்தப்பட்டு புதியவை பொருத்தப்பட்டு உள்ளது. உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
துரைப்பாண்டியன், அனுப்பானடி.
நடவடிக்கை தேவை
மதுரை மாநகராட்சி 31-வார்டு கோமதிபுரம், அன்பு நகர், வள்ளலார் தெரு ஆகிய பகுதி சாலைகள் சேதமடைந்து இருப்பதால் மழையால் சேறும் சகதியுமாக காணப்படுகிறது. இதனால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் அவதிஅடைந்து வருகின்றனர். எனவே இப்பகுதி சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், மதுரை.
கிடப்பில் பராமரிப்பு பணி
மதுரை மாவட்டம் சமயநல்லூர் ஊராட்சி கால்நடை மருத்துவமனை அருகில் செல்லும் கழிவு நீர் கால்வாயை அகற்றும் பணி பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது.. இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிடப்பில் உள்ள பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
ராஜன், சமயநல்லூர்.