புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-11-16 18:45 GMT

விபத்து அபாயம்

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றியம் கரிசல்பட்டி ஊராட்சியில் மக்கள் அதிகமாக செல்லக்கூடிய பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் மூடிகள் உடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள குழந்தைகள் அடிக்கடி தவறி விழுந்து காயமடைகின்றனர். எனவே இந்த பகுதியில் உள்ள கால்வாய் மீது சிறிய பாலம் அமைத்து விபத்து ஏற்படுவதை தவிர்க்க வேண்டும்.

ஜமீல், கரிசல்பட்டி.

வாகன ஓட்டிகள் அவதி

சிவகங்கை மாவட்டம் கல்லல் இந்திரா நகர் செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து உள்ளது. மேலும் சாலையின் இருபுறங்களிலும் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், இந்திரா நகர்.

நடவடிக்கை தேவை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செஞ்சைபாப்பா ஊருணி 34-வது வார்டு 12-வது வீதியில் மழைநீர் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர சிரமப்படுகின்றனர். மேலும் இரவு நேரங்களில் பாம்புகள் வீடுகளுக்குள் புகுந்துவிடுவதால் அவதிப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் மழைநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சேகர், சிவகங்கை.

தெருநாய்கள் தொல்லை

சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் அச்சத்துடனே வெளியே சென்றுவருகின்றனர். எனவேதொல்லை தரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், சிவகங்கை.

தார்சாலை வேண்டும்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் ஓ.சிறுவயல் சாலை மதுக்கடையை ஒட்டி அமைந்துள்ள சாலை பல ஆண்டுகளாக மண் ரோடாக உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் இந்த சாலையில் மழைநீர் கால்வாயும் உள்ளது. எனவே இதில் ஒரு சிறுபாலம் அமைத்து தார்ச்சாலை ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மணிகண்டன், காரைக்குடி. 

Tags:    

மேலும் செய்திகள்