புகார்பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-10-05 18:42 GMT

பயணிகள் சிரமம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் பஸ்கள் முறையான பராமரிப்பின்றி ஓட்டை உடைசலாக காணப்படுகிறது. மேலும் மழை பெய்தால் நீரானது பஸ்சிற்குள் ஒழுகும் நிலையும் உள்ளது. இதனால் பஸ் பயணிகள் மிகுந்த சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த வழித்தட பஸ்களை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

கணபதி, சிவகாசி.

நாய்கள் தொல்லை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சி சம்மந்தபுரம் பகுதிக்குட்பட்ட 9, 10 மற்றும் 11- வது வார்டு தெருக்களில் நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் இந்தப்பகுதியில் நடமாட முடியாமல் மக்கள், குழந்தைகள் சிரமப்படுகிறார்கள். மேலும் இரவு நேரங்களில் செல்லும் வாகனஓட்டிகளை கடிக்க துரத்தி செல்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை அப்புறப்படுத்த வேண்டும்.

தனுஷ், சம்மந்தபுரம்.

சேதமடைந்த தொட்டி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா சத்திரப்பட்டி கிராமத்தில் உள்ள நீர்தேக்க தொட்டி சேதமடைந்து காணப்படுகிறது. நீர்தேக்க தொட்டியின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் உள்ளது. இந்த நீர்தேக்க தொட்டியால் பொதுமக்கள் அச்சம் அடைகின்றனர். எனவே இப்பகுதியில் புதிய நீர்தேக்க தொட்டி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேல்முருகன், சத்திரப்பட்டி.

தோண்டப்பட்ட சாலை

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி 37 -வது வார்டுக்கு உட்பட்ட முஸ்லிம் சர்க்கரை வாவா தெரு பகுதியில் குழாய் பதிப்புக்காக சாலைகள் தோண்டப்பட்டது. இந்நிலையில் தோண்டப்பட்ட சாலைகள் மூடப்படாமல் உள்ளது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்கமுடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே தோண்டிய சாலைகளை மூட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முருகேசன், சிவகாசி.

அடிப்படை வசதிகள் தேவை

விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் அருகே ரெங்கப்பநாயக்கன்பட்டி கிராமத்திற்கு மயான வசதி, சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகள் சரியான முறையில் இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை கவனித்து அடிப்படை வசதிகளை இப்பகுதியில் அமைக்க வேண்டும்.

அல்லிதுரை, ரெங்கப்பநாயக்கன்பட்டி.

சுகாதார சீர்கேடு

விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டியில் குப்பை சேகரிக்க வரும் வாகனம் குறிப்பிட்ட நேரத்தில் வராததால் அப்பகுதியில் குப்பைகள் தேங்கும் நிலை நிலவுகிறது. இதனால் சுகாதாரம் கெடுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் குப்பை சேகரிக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

ஜெயநாதன், அல்லம்பட்டி.

பொதுமக்கள் அச்சம்

விருதுநகர் மாவட்டம் முகவூர் வனமூர்த்திலிங்கம் பிள்ளை தெருவில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இப்பகுதியில் நாய்களின் நடமாட்டத்தால் பொதுமக்கள் வீதிகளில் செல்லவே அச்சமடைகின்றனர். சில நாய்கள் நோயுற்று திரிவதால் அவை பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகின்றன. எனவே நாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனந்தபாபு, முகவூர்.

நடவடிக்கை எடுப்பார்களா?

விருதுநகர் மாவட்டத்தின் சில கடைகளில் பள்ளி மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் போதை பொருள் விற்பனை விற்கப்படுகிறது. இதனால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலை உள்ளது. எனவே போதை பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பரத்ராஜா, விருதுநகர்.

நோயாளிகள் அவதி

விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரத்த அழுத்தம் குறைக்கும் மாத்திரைகளின் பற்றாக்குறையால் சில சமயங்களில் நோயாளிகள் அவதியடைகின்றனர். எனவே அவசர தேவைகளுக்கு மாத்திரைகள் வாங்க வெகுதூரம் சென்றுவர வேண்டி உள்ளது. எனவே மாத்திரைகளின் இருப்பை அதிகரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், விருதுநகர்.

Tags:    

மேலும் செய்திகள்