புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-10-02 18:45 GMT

கூடுதல் பஸ் இயக்கப்படுமா?

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் இருந்து மதுரைக்கு குறிப்பிட்ட அளவே பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் இந்த வழியாக பயணிக்கும் பள்ளி- கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களின் அன்றாட வேலைகள் பாதிக்கப்படுகிறது. எனவே இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாகனங்களின் ஆக்கிரமிப்பு

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பஸ் நிலையம் அருகே சிலர் தங்கள் இருசக்கர வாகனங்களை சாலையில் நிறுத்தி செல்கின்றனர். இதனால் சாலையில் பயணிக்க முடியாமல் நடைபாதையினர் மற்றும் வாகனஓட்டிகள் அவதியடைகின்றனர். வாகனங்களின் ஆக்கிரமிப்பால் இடையூறுகளுக்கு நடுவே பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குரங்குகள் தொல்லை

சிவகங்கை மாவட்டம் பிரான்மலை, சிங்கம்புணரி நகர் பகுதியில் குரங்குகள் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இந்த குரங்குகள் சாலையில் செல்லும் பொதுமக்களை அச்சுறுத்துகிறது. மேலும் வீட்டில் உள்ள அத்தியாவசிய பொருட்களை எடுத்து செல்கின்றன. இதனால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கரடு, முரடான சாலை

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மேலவண்ணாயிருப்பு பகுதியில் உள்ள சாலை சேதமடைந்து கரடு முரடாக காட்சியளிக்கிறது. சாலையில் பயணிப்பதால் வாகனங்களும் பழுதாகின்றது. மேலும் வாகனஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே இந்த பகுதியில் புதிய சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுற்றுச்சூழல் மாசு

சிவகங்கை மாவட்டம் கல்லல் நகர் பகுதி சாலைகளில் குப்பைகள் ஆங்காங்கே குவிந்து காணப்படுகிறது. குப்பைகளில் பெரும்பாலும் பிளாஸ்டிக் கழிவுகளே அதிக அளவில் உள்ளன. இதனால் சுற்றுச்சூழல் மாசடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சாலைகளில் குப்பைகள் வீசுவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?

Tags:    

மேலும் செய்திகள்