தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
ஆபத்தான பள்ளம்
மதுரை அசோக்நகர் செல்லும் வழியில் பள்ளிக்கு அருகில் கேபிள் பதிக்க பள்ளம் தோண்டப்பட்டது. இந்த வழியாக தினமும் மாணவர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் சென்று வருகின்றனர். இவ்வாறு தோண்டப்பட்ட பள்ளத்தால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் பள்ளத்தை விரைந்து மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மகிழினி, அசோக்நகர்.
பொதுமக்கள் அச்சம்
மதுரை மாவட்டம் வில்லாபுரம் குடியிருப்பு பகுதியில் மரம் ஒன்று பட்டு போய் நிற்கின்றது. எந்த நேரத்திலும் விழும் நிலையில் உள்ள இந்த மரத்தினால் குடியிருப்பு வாசிகள் அச்சம் அடைகின்றனர். மேலும் மழை காலங்களில் இந்த மரத்தினால் பெரும் அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே இந்த பட்டுபோன மரத்தினை அகற்ற வேண்டும்.
பத்மாவதி, வில்லாபுரம்.
கழிப்பறை வசதி வேண்டும்
மதுரை ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் பொதுமக்கள் பயன்படுத்த இலவச கழிப்பறை இல்லை. கட்டண கழிப்பறைகளே உள்ளன. இதனால் பஸ் நிலையம் வரும் பொதுமக்கள் அவதியடைகின்றனர். எனவே இலவச கழிப்பறை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முரளி, ஆரப்பாளையம்.
பயணிகளுக்கு இடையூறு
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ஒன்றியம் வீரபெருமாள்புரம் ஊராட்சியில் தனிநபர் கழிப்பறை மற்றும் செப்டிக் டேங்க் வீதிகளில் கட்டப்பட்டுள்ளது. இதனால் சாலையில் பொதுமக்கள் பயணிக்க இடையூறாக உள்ளது. எனவே இதற்கு அதிகாரிகள் தீர்வு காண வேண்டும்.
நாராயணன், வீரபெருமாள்புரம்.
அடிப்படை வசதி வேண்டும்
மதுரை வேடற்புளியங்குளம் சக்திநகர் பகுதியில் சாலை, தெருவிளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. மேடு, பள்ளமான சாலையில் பயணிக்கும் முடியாமல் வாகனஓட்டிகள் அவதியடைகின்றனர். எனவே இப்பகுதியில் அடிப்படை வசதிகளை செய்துதர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், மதுரை