புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
அடிப்படை வசதி
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் தாலுகா கொல்லங்குடி கிராமம் அழகர்சாமி நகர் ஆதிதிராவிடர் நகரில் சாலைவசதி, மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் இப்பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் அடிப்படை வசதிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கருப்பையா, காளையார்கோவில்.
ஓட்டை உடைசலான பஸ்கள்
சிவகங்கை மாவட்டத்தில் இருந்து மதுரைக்கு செல்லும் புறநகர் பஸ்கள் பராமரிக்கபடாமல் குப்பையாக காணப்படுகிறது. மேலும் மாவட்டத்தில் ஓடும் சில பஸ்கள் ஓட்டை உடைசலாக காணப்படுகிறது. இதனால் பஸ் பயணிகள் சிரமத்திற்குள்ளாகி வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ்களை பராமரிக்க வேண்டும்.
நாகதேவி, சிவகங்கை.
கால்நடை மருத்துவமனை தேவை
சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே பணக்குடியில் கால்நடை மருத்துவமனை கிடையாது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளுக்கு நோய்பாதிப்பு ஏற்பட்டால் பலகிலோ மீட்டர் தூரம் சென்று சிகிச்சை அளித்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் கால்நடை மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முருகன், கல்லல்.
சுகாதார சீர்கேடு
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே வடவன்பட்டியில் கிராமத்தில் கழிவுநீர் செல்ல வாருகால் வசதி கிடையாது. இதனால் கழிவுநீரானது சாலையில் தேங்கி அப்பகுதி சுகாதார சீர்கேடாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் வாருகால் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
லிங்கேஷ்வரன், சிங்கம்புணரி.
புதர் மண்டிகிடக்கும் மைதானம்
சிவகங்கை மாவட்டம் 48காலனி அயுதப்படை குடியிருப்பு செல்லும் பகுதியில் நகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்தப்பள்ளி மைதானம் புதர் மண்டி காணப்படுகிறது. மேலும் நாய்கள், கால்நடைகள் அதிக அளவில் பள்ளி உள்ளே புகுந்து விடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்தி புதர்களை அகற்ற வேண்டும்.
ராஜா, சிவகங்கை.