பயணிகள் சிரமம்
ராமநாதபுரம் பஸ் நிலையத்திற்கு ரெகுநாதபுரம் முதல் தெற்குதரவை வழியாக இயக்கப்படும் சில பஸ்கள் சேதமடைந்து உள்ளது. மழை காலங்களில் பயணிகள் பஸ்களில் பயணிக்க சிரமப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் இயக்கப்படும் பஸ்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அசோக்குமார், ரெகுநாதபுரம்.
சேதமடைந்த சாலை
ராமநாதபுரம் மாவட்டம் சாத்தக்கோன்வலசை பஞ்சாயத்திற்கு உட்பட்ட உடையார்வலசை கிராமத்தில் உள்ள சாலை முற்றிலும் சேதமடைந்து காணப்படுகிறது. சாலையில் பயணிப்பதால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் சிலர் சாலையை பயன்படுத்துவதை தவிர்த்து மாற்று பாதையில் சென்று வருகின்றனர். எனவே இக்கிராமத்தில் உள்ள சேதமடைந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாலமுருகன், உடையார்வலசை.
குண்டும் குழியுமான சாலை
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள மேலாங்குடி கிராமத்தில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. சாலையில் பயணிப்பதால் வாகனஓட்டிகள் சிறு, சிறு விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் வாகனஓட்டிகள் சிலர் விபத்து அபாயம் உள்ளதால் சாலையில் பயணிப்பதை தவிர்த்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குமார், பரமக்குடி.
ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் கோவில் ரதவீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மேலும் நடைமேடை பாதைகளில் நிழற்கூரைகள் அமைத்து பக்தர்களை வெயில் மழையிலிருந்து காக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாரிமுத்து, ராமேசுவரம்.
தொற்றுநோய் பரவும் அபாயம்
ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள அம்மா உணவகம் எதிரே மிகவும் மோசமான நிலையில் கழிவுநீர் தேங்கி உள்ளது. சுகாதார சீர்கேடுடன் காணப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே வளாகங்களை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்வாணன், ராமநாதபுரம்.கை எடுக்க வேண்டும். பொதுமக்கள், காரைக்குடி.