புகார்பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-08-09 17:46 GMT

நாய்கள் அட்டகாசம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அம்பாள்புரம் 2-வது வீதி பகுதியில் தெருநாய் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். மக்களின் நலன்கருதி தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா? ஆகாஷ், காரைக்குடி,

கொசுத்தொல்லை

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் சாக்கடை கால்வாய் திறந்த நிலையில் உள்ளது. இதனால் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகிறது. கொசுக்களினால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே திறந்த நிலையில் உள்ள பாதாள சாக்கடை கால்வாயை மூடிட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிலால், இளையான்குடி.

மின்கம்பம் சேதம்

சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியத்திற்கு உட்பட்ட வெற்றியூர் ஊராட்சியில் மெயின் ரோட்டில் வீடுகளுக்கு அருகே உள்ள மின்கம்பம் சேதமடைந்து உடைந்து விழும் நிலையில் உள்ளது. இந்த மின்கம்பத்தால் விபத்து ஏதும் ஏற்படும் முன்னர் மின்கம்பத்தை மாற்றியமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

படியான், கல்லல்.

கூடுதல் பஸ் இயக்கப்படுமா?

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் இயக்கப்படும் பஸ்கள் போதுமானதாக இல்லை. இதனால் இந்த பகுதியில் உள்ள மாணவர்கள் பஸ்சின் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர். எனவே இந்த பகுதியில் கூடுதல் பஸ் இயக்கிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜோதிமணி, காரைக்குடி.

பயணிகள் அவதி

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றியத்தில் 21 ஊராட்சிகள் உள்ளன. இதில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக குறைந்த அளவு பஸ் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இதனால் வெளியூர் செல்லும் பயணிகள் அவதி அடைகின்றனர். வேளாண் பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்ல முடியாமலும் உள்ளனர். எனவே எஸ்.புதூர் கிராம பகுதிகளில் கூடுதல் பஸ் இயக்க வேண்டும். சேதுராமன், எஸ்.புதூர்.




மேலும் செய்திகள்