போலீசாரை இழிவுபடுத்தியாக எச்.ராஜா மீது புகார்

போலீசாரை இழிவுபடுத்தியாக எச்.ராஜா மீது புகார் செய்யப்பட்டது.

Update: 2022-10-01 18:45 GMT

காரைக்குடி, 

காரைக்குடி மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த நவுசாத்அலி காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வினோஜிடம் கொடுத்த புகார் மனுவில் கூறியுள்ளதாவது:- பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பு மத்திய அரசால் தடை செய்யப்பட்டது. இந்த அமைப்பு பற்றி பேசினால் தேச துரோக வழக்கில் போலீசார் கைது செய்ய வேண்டும் என்றும், கடந்த 29-ந் தேதி நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக டி.ஜி.பி., பி.எப்.ஐ. இயக்கத்திடம் சம்பளம் வாங்குகிறாரா என சந்தேகம் வருகிறது என்றும் காவல்துறையை இழிவுபடுத்தி காரைக்குடி முன்னாள் எம்.எல்.ஏ.வும், பா.ஜ.க. முன்னாள் தேசிய செயலாளருமான எச்.ராஜா பேசி உள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்