சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போலீசில் புகார்

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.;

Update:2022-05-22 00:39 IST

குளித்தலை, 

குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 23). கட்டிட தொழிலாளி. இவர், 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி ஒருவரை திருமணம் செய்துள்ளார். இதுகுறித்து சமூக நல அலுவலர் பூங்கோதை குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் குழந்தை திருமண தடுப்பு சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் முருகானந்தம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்