நாடாளுமன்ற தேர்தலில் தென் மாவட்டத்தில் போட்டியா? சரத்குமார் பதில்

சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் ஆர்.சரத்குமார் நேற்று காலையில் நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலுக்கு சென்றார்.

Update: 2023-12-10 20:43 GMT

நெல்லை,

சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் ஆர்.சரத்குமார் நேற்று காலையில் நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலுக்கு சென்றார். அங்கு கொடி மரத்தை வணங்கினார். அதனை தொடர்ந்து மூலவரையும், காந்திமதி அம்பாளையும் தரிசனம் செய்தார்.

பின்னர் வெளியே வந்த சரத்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எங்களின் நிலைப்பாடு குறித்து கட்சியின் உயர்மட்ட குழு கூடி முடிவு செய்யப்படும். பா.ஜனதாவுடன் இணைந்து பயணிக்க வாய்ப்பு இருக்கிறது என்றால் இறைவன் நினைப்பது நடக்கும். பிரதமர் மோடியை ஒரு கட்சியைச் சேர்ந்தவராக பார்க்காமல் நாட்டின் தலைவராக பார்க்க வேண்டும். அவர் இந்தியாவின் பெயரை உலக அளவில் உயர்த்தி உள்ளார். அதனாலேயே அவரது பெயரை சுட்டிக்காட்டி பேசியுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நீங்கள் தென் மாவட்டத்தில் போட்டியிட வாய்ப்பு உள்ளதா? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் இருக்கலாம் என்று பதில் தெரிவித்து சென்றார்.

பின்னர் அங்கிருந்த தூய்மை பணியாளர்களுடன் சரத்குமார் 'செல்பி' எடுத்துக்கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்