பொ.மல்லாபுரம் அரசு பள்ளியில் கட்டுரை, பேச்சு போட்டி

Update: 2022-11-14 18:45 GMT

பாப்பிரெட்டிப்பட்டி:

பாபிரெட்டிப்பட்டி அருகே உள்ள பொ.மல்லாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. இதற்கு தலைமை ஆசிரியர் பழனிசாமி தலைமை தாங்கினார்.

விழாவையொட்டி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சு, ஓவியம் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் தமிழ் தென்றல் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்