ஆலங்குடியில் சமுதாய வளைகாப்பு விழா

ஆலங்குடியில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

Update: 2022-12-15 18:43 GMT

ஆலங்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட தனியார் மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமை தாங்கினார். சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு 400 கர்ப்பிணிகளை வாழ்த்தி சீர்வரிசை பொருட்களை வழங்கி சமுதாய வளைகாப்பு விழாவை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், கலைஞரின் வழியில் தற்போது வரை இத்திட்டம் செயல்பட்டு வருகிறது என்றார். இதில் பேரூராட்சி தலைவர் ராசி முருகானந்தம், பேரூராட்சி செயலாளர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்