கா்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு
கா்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு நடந்தது.
தோகைமலையில் சமூக நலம் மற்றும் அங்கன்வாடி துறையில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இதற்கு வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தங்கமணி தலைமை தாங்கினார். வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் முருகவள்ளி, வைரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கர்ப்பிணிகளுக்கு வளையல், மஞ்சள், சந்தனம், குங்குமம் மற்றும் 5 வகை சாதங்கள் வழங்கி வளைகாப்பு செய்தனர். பின்னர் கர்ப்பிணிகள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில், அங்கன்வாடி பணியாளர்கள், கர்ப்பிணிகள் கலந்து கொண்டனர்.