ஊத்துக்கோட்டை அருகே கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

ஊத்துக்கோட்டை அருகே கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update:2022-12-23 20:28 IST

ஊத்துக்கோட்டை அருகே உள்ள போந்தவாக்கத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பூண்டி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் டி.கே.சந்திரசேகர் தலைமை தாங்கினார். வடக்கு ஒன்றிய செயலாளர் பொன்னுசாமி எனும் ஜான், இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் தில்லை குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. டி.ஜெ.கோவிந்தராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

சீதஞ்சேரி, கச்சூர், வெள்ளாத்துக்கோட்டை பகுதிகளை சேர்ந்த 200 பெண்களுக்கு சீர்வரிசைகளை வழங்கி வளைகாப்பு நடத்தி வைத்தார். குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் இந்திரா, மேற்பார்வையாளர் எழிலரசி, பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் மாணிக்கம், மருத்துவ அலுவலர் ராமச்சந்திரன், மாவட்ட குழு உறுப்பினர் சுதாகர், மாவட்ட பிரதிநிதிகள் சீனிவாசன், சிவய்யா, ஒன்றிய தி.மு.க துணைச் செயலாளர் சீதஞ்சேரி நாகராஜ், ஊத்துக்கோட்டை நகர செயலாளர் அபிராமி, பேரூராட்சி துணைத் தலைவர் குமரவேல், வார்டு கவுன்சிலர் கோல்ட் மணி, ஊராட்சிமன்ற தலைவர்கள் கூனிபாளையம் ரகு, சித்ரா பாபு, ஸ்ரீராம், முரளி, சரசு பூபாலன் மற்றும் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்