இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-09-05 14:02 GMT

கோவில்பட்டி:

சென்னையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில துணைச் செயலாளர் மூ. வீரபாண்டியன் மீது தாக்குதல் நடத்தியவர்களை கண்டித்தும், அவர்களை கைது செய்ய கோரியும், கோவில்பட்டி பயணிகள் விடுதி முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் சரோஜா தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர்கள் பரமராஜ், வக்கீல் ரஜினி கண்ணம்மா, ஜோசப், செல்லையா, தாலுகா செயலாளர் பாபு, நகர துணை செயலாளர்கள் முனியசாமி, அலாவுதீன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்