எட்டயபுரத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
எட்டயபுரத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
எட்டயபுரம்:
எட்டயபுரம் பஸ் நிலையம் அருகே நேற்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
எட்டயபுரம் நகருக்கு வாரம் ஒருமுறை சீராக குடிநீர் வழங்க வேண்டும். மின் கட்டணம், சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். பத்திரப்பதிவு துறையில் மோசடி ஆவண பதிவை ரத்து செய்ய வேண்டும். மத்திய, மாநில அரசுகள் மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு நகர செயலாளர் முனியசாமி தலைமை தாங்கினார். நகரதுணை செயலாளர் முனியராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட உதவி செயலாளர் பாலமுருகன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, சேது ஆகியோர் பேசினர். தாலுகா செயலாளர் சோலையப்பன், நகர உதவி செயலாளர் காளியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.