தர்மபுரியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தர்மபுரியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-09-08 17:45 GMT

சென்னையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் வீரபாண்டியன் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் கலைச்செல்வம் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர்கள் தேவராசன், தமிழ்க்குமரன், சின்னசாமி, மாதேஸ்வரன், கமலாமூர்த்தி, ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட பொதுச்செயலாளர் மணி மற்றும் நிர்வாகிகள் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்கள். வீரபாண்டியன் மீது தாக்குதல் நடத்தியவர்களை உரிய விசாரணை அடிப்படையில் கைது செய்ய போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் வட்டார செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்