இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம்

கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

Update: 2023-03-17 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலையை அகலப்படுத்த கோரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மந்தித்தோப்பு தேவர் படிப்பகம் அருகில் சங்கு ஊதும் போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு தாலுகா செயலாளர் பாபு தலைமை தாங்கினார். போராட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர்கள் சேதுராமலிங்கம், பரமராஜ், லெனின் குமார், செல்லையா சுரேஷ் குமார், வக்கீல் ரஞ்சினி கண்ணம்மா, நகரச் செயலாளர் சரோஜா, துணை செயலாளர் முனியசாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்