இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சிவகிரியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சிவகிரி:
சிவகிரி நகர இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பஸ் நிலையம் அருகே உள்ள காந்தி கலையரங்கம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது.
சிவகிரி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள கோனார் குளம் ஓடையில் முட்புதர்களை அப்புறப்படுத்த வேண்டும். போக்குவரத்து இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
சிவகிரி நகர செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். நகர துணைச் செயலாளர் ராஜேந்திரன், நகர பஞ்சாயத்து கவுன்சிலர் அருணாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி மாவட்ட செயலாளர் இசக்கித்துரை, விவசாய சங்கத்தை சேர்ந்த வேல்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.