இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆலோசனை கூட்டம்

இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2023-09-11 18:45 GMT

வேளாங்கண்ணி:

விலைவாசி உயர்வு உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 14-ந்தேதி வரை நாகை தலைமை தபால் அலுவலகம் முன்பாக செல்வராஜ் எம்.பி. தலைமையில் மறியல் போராட்டம் நடக்கிறது. இந்த போராட்டத்தில் கலந்துகொள்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் கீழையூர் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வாழக்கரையில் நடந்தது. கூட்டத்திற்கு தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் பக்கிரிசாமி தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் செல்வம் போராட்டத்தின் நோக்கங்களை விளக்கி பேசினார். கூட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர் சுப்பிரமணியன், ஒன்றிய துணை செயலாளர் மாசேத்துங், கிளை செயலாளர் சந்திரகாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்