தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு

Update: 2022-12-19 18:45 GMT

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில் மனு கொடுப்பதற்காக பொதுமக்கள் வந்து சென்ற வண்ணம் இருந்தனர். அப்போது திடீரென ஒருவர் கலெக்டர் அலுவலகம் முன்பு பாட்டிலில் எடுத்து வந்த மண்எண்ணெயை தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைப்பார்த்து அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஓடிச்சென்று அந்த நபரின் கையில் இருந்த பாட்டிலை பறிமுதல் செய்து அவரது உடலில் தண்ணீரை ஊற்றி தீக்குளிக்கும் முயற்சியை தடுத்து நிறுத்தினர்.

விசாரணையில் அவர் உளுந்தூர்பேட்டை தாலுகா கொரட்டங்குறிச்சியை சேர்ந்த சூசைநாதன் என்பது தெரியவந்தது. இவருக்கும் பாதூர் கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கும் நிலம் சம்பந்தமான வழக்கு உளுந்தூர்பேட்டை கோர்ட்டில் நிலுவையில் உள்ள நிலையில் நிலத்தில் அமைக்கப்பட்டு இருந்த முள் வேலியை எதிர் தரப்பினர் தீயிட்டு கொளுத்தியதாகவும், இதை தட்டி கேட்டபோது அவரை திட்டி தாக்கி கொலை மீட்டல் விடுத்ததாகவும், இதுகுறித்து திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. பின்னர் அவருக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்