நாமக்கல்:
நாமக்கல் நகராட்சி ஆணையாளராக சுதா பணியாற்றி வந்தார். அவர் பதவி உயர்வு பெற்று ஈரோடு மாநகராட்சி துணை ஆணையாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சியில் பணியாற்றி வந்த சென்னுகிருஷ்ணன் பதவி உயர்வு பெற்று, நாமக்கல் நகராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளராக பொறுப்பேற்று கொண்டார். இவர் ஏற்கனவே சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் நரசிங்கபுரம் நகராட்சிகளில் ஆணையாளராக பணி புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.