முன்னாள் அமைச்சர் செந்தூர்பாண்டியன் நினைவு தினம் அனுசரிப்பு

செங்கோட்டையில் முன்னாள் அமைச்சர் செந்தூர்பாண்டியன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

Update: 2023-07-11 18:45 GMT

செங்கோட்டை:

செங்கோட்டையில் முன்னாள் அமைச்சர் செந்தூர் பாண்டியனின் 8-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி செங்கோட்டை அருகே கற்குடி கிராமத்தில் அவரது தோட்டத்தில் அமைந்துள்ள நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. செந்தூர்பாண்டியன் மூத்த மகனும், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான அய்யப்பராஜ், இளைய மகன் கடையநல்லுார் சட்டமன்ற உறுப்பினரும், தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர கட்சி நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், நகர்மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அன்னதானம் நிகழ்ச்சி நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்