விரைவில் த.வெ.க. மாவட்டச் செயலாளர்கள் நியமனம் ?
சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வருகிறது
சென்னை,
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியிருக்கிறார். இந்த கட்சியின் முதல் மாநாடு கடந்த மாதம் 27-ந்தேதி விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் விஜய்யின் பரபரப்பான பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.மாநாட்டை தொடர்ந்து 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக்கழகம் தயாராகி வருகிறது. அதற்கேற்ப அரசியல் வியூகங்களை விஜய் அமைத்து வருகிறார்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் 100 மாவட்ட செயலாளர்களை நியமிக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 2 மாதங்களில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் 28 சார்பு அணி நிர்வாகிகளை நியமிக்கவும் விஜய் திட்டமிட்டுள்ளார்.